Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோயம்பேட்டில் ஆயுத பூஜை சந்தை - இன்று முதல் அக்.23 வரை!

கோயம்பேட்டில் ஆயுத பூஜை சந்தை - இன்று முதல் அக்.23 வரை!

சிறப்பு சந்தையை அடையாளம் காணும் வகையில் வழிகாட்டி பலகைகள் அமைப்பது, ஒலிபெருக்கியால் அறிவிப்புகள் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில், நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 23-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடக்கிறது. இதில், அவல், பொரி, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடியில் 1.5 ஏக்கரில் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலர் கார்த்திகா தலைமையில், அங்காடி நிர்வாக குழு, காவல்துறை, தீயணைப்புத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், வியாபார பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

சிறப்பு சந்தையை அடையாளம் காணும் வகையில் ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் அமைப்பது, ஒலிபெருக்கியால் அறிவிப்புகள் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், வாகன நெரிசலை தடுக்கவும், அங்காடி நிர்வாக குழு அலுவலர்களை சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் எடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
Indigo's $328 mn deal with Citi for 8 Airbus aircraft buys
அடுத்த செய்தி
ரஷ்யா தாக்கினால் பதிலடிக்குத் தயார் - நேட்டோ தளபதி எச்சரிக்கை!

தொடர்புடைய செய்திகள்